News items relevant to engineering, science, environment, agriculture, public health, sanitation and natural resources with respect to North and East of Sri Lanka can be found here.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இலங்கையில்

Published on 2015-06-25 @ 09:21:00 PM

'யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர் வளத்தை பேணிப் பாதுகாப்போம் எனும் தலைப்பில் தொடர் உரையாடல் நிகழ்வில் பொறியியலாளர் எம்.சூரியசேகரம் 'கடல் நீரில் இருந்து குடிநீரைப் பெறுதல் எமக்கு பொருத்தமானதா' என்ற பொருளில் உரையாடல் ஒன்றை 21.06.2015இல் நிகழ்த்தினார்.Read more...

யாழ்.நிலத்தடி நீர் மாசு தொடர்பில் ஆராய முற்பட்டால்

Published on 2015-06-25 @ 09:16:00 PM

யாழில் நிலத்தடி நீர் எவ்வாறு மாசடைந்தது என்பதை அறிய முற்பட்டால் பல சர்ச்சைகள் நிச்சயமாக உருவாகும். எனவே அதை குறித்து நான் பேசவில்லை. வடக்கிற்கான குடிநீர் விநியோகத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.இந்நிலையில் அதனை சீர்படுத்த வேண்டிய தேவையும், குடாநாட்டின் நிலத்தடி நீர் சுத்தப்படுத்தப்பட வேண்டிய தேவையும் எமக்குள்ளது.குடாநாட்டில் சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் மாசுபாட்டை, தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கவும் நாம் துரித நடவடிக்கை ஒன்றை எடுத்துவருகின்றோம் ன அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.Read more...

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தேவையான குடிநீரை

Published on 2015-06-25 @ 08:57:00 PM

யாழ்ப்பாணத்திற்கு தேவையான குடிநீரை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். எதிர்காலத்தில் இரணைமடு குளத்தின் நீர்கொள்ளளவை 80 ஆயிரம் ஏக்கருக்கு ஏற்றதாக வீஸ்தரித்து அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்துக்கான குடிதண்ணீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் Read more...

Send us news ites that are relevant to this section