News items relevant to engineering, science, environment, agriculture, public health, sanitation and natural resources with respect to North and East of Sri Lanka can be found here.

Biosand filter - பெற்றோலிய மாசுக்கு ஒரு தீர்வா?

Published on 2015-07-04 @ 03:38:00 PM

சுன்னாகம் பெற்றோலிய மாசுபடுதலுக்கு biosand filtration ஓர் உகந்ததாக தீர்வாக இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் ஓர் ஊடகமாநாடு நடாத்தப்பட்டது. கலாநிதி பாலகுமார் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் ஆகியோருடன் வைத்தியர் நொவில் விஜயசேகர ஆகியோர் கருத்துரைத்தார்கள். Read more...

ஐந்து வருடங்கள் தொடர் ஆராய்ச்சி முடிவுகளின் பின்னரே கிணற்று நீரைப் பயன்படுத்தலாம்.

Published on 2015-07-04 @ 03:10:00 PM

நிபுணர் குழுவினரின் அறிக்கை வெளிவருவதில் பல்வேறு சிக்கல் நிலைகள் காணப்படும் நிலையில் 5 வருடங்கள் தொடர் ஆராய்ச்சி முடிவுகளின் பின்னரே நீரைப் பயன்படுத்துமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். இ. தேவநேசன் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். கண்காணிப்பில் வைத்திருப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து ஒரே கிணற்றில் இருந்து குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கைகள் பெறப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read more...

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இலங்கையில்

Published on 2015-06-25 @ 09:21:00 PM

'யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர் வளத்தை பேணிப் பாதுகாப்போம் எனும் தலைப்பில் தொடர் உரையாடல் நிகழ்வில் பொறியியலாளர் எம்.சூரியசேகரம் 'கடல் நீரில் இருந்து குடிநீரைப் பெறுதல் எமக்கு பொருத்தமானதா' என்ற பொருளில் உரையாடல் ஒன்றை 21.06.2015இல் நிகழ்த்தினார்.Read more...

யாழ்.நிலத்தடி நீர் மாசு தொடர்பில் ஆராய முற்பட்டால்

Published on 2015-06-25 @ 09:16:00 PM

யாழில் நிலத்தடி நீர் எவ்வாறு மாசடைந்தது என்பதை அறிய முற்பட்டால் பல சர்ச்சைகள் நிச்சயமாக உருவாகும். எனவே அதை குறித்து நான் பேசவில்லை. வடக்கிற்கான குடிநீர் விநியோகத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.இந்நிலையில் அதனை சீர்படுத்த வேண்டிய தேவையும், குடாநாட்டின் நிலத்தடி நீர் சுத்தப்படுத்தப்பட வேண்டிய தேவையும் எமக்குள்ளது.குடாநாட்டில் சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் மாசுபாட்டை, தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கவும் நாம் துரித நடவடிக்கை ஒன்றை எடுத்துவருகின்றோம் ன அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.Read more...

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தேவையான குடிநீரை

Published on 2015-06-25 @ 08:57:00 PM

யாழ்ப்பாணத்திற்கு தேவையான குடிநீரை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். எதிர்காலத்தில் இரணைமடு குளத்தின் நீர்கொள்ளளவை 80 ஆயிரம் ஏக்கருக்கு ஏற்றதாக வீஸ்தரித்து அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்துக்கான குடிதண்ணீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் Read more...

Chunnakam Ground Water Contaminated: Minister Hakeem

Published on 2015-04-12 @ 12:40:00 AM

Minister of Urban Development, Water Supply and Drainage, Rauff Hakeem said in Parliament yesterday that a report compiled by the Ministry had revealed that... ... ground water surrounding the Chunnakam power plant was contaminated with oil and was not suitable for drinking.Read more...

சுன்னாகம் பகுதியிலுள்ள பல கிணறுகளில் கழிவு எண்ணெய் படிமங்கள்

Published on 2015-04-11 @ 09:11:00 AM

சுன்னாகம் பகுதியிலுள்ள பல கிணறுகளில் கழிவு எண்ணெய் படிமங்களும் கிறீஸ் படிமங்களும் காணப்படுவது உண்மையென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதால் அக்கிணறுகளின் நீரை மக்கள் அருந்த வேண்டாமென நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார். Read more...

குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடய

Published on 2015-04-10 @ 09:44:00 PM

குடாநாட்டு குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடயத்தையும் நாம் மறைக்க வேண்டிய தேவையோ அழுத்தங்களோ எமக்கில்லை என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் கலந்த விவகாரம் அண்மைய காலங்களில் பெரும் சிக்கலுக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இது தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.Read more...

ஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் தொடர்

Published on 2015-04-10 @ 12:07:00 AM

வடக்கு மாகாணசபைக்கு புறம்பாக, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காகவும் கெட்ட எண்ணத்துடனும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பில், ஆய்வை நடத்திய தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். இன்னுமொரு திசையில் வடக்கு மாகாணசபையின் ஆய்வை செல்லுபடியில்லாமல் செய்து, பீதியை வெளியிடும் வகையில், கெட்ட எண்ணத்துடன் இவ்வாறான பிழையான ஆய்வுகள் விசமத்தனத்துடன் செய்யப்படுகின்றனவா என்று ஆராய வேண்டிய பொறுப்பு மாகாணசபைக்கு உண்டு.Read more...

ஆறு நாள்களில் தீர்வு- ஆளுநரின் உறுதி

Published on 2015-04-08 @ 09:44:00 PM

திர்வரும் 12 ஆம் திகதிவரை பொறுத்திருக்குமாறும், அதன்பின்னர் தாம் பதில் தருவர் எனவும் வடக்குமாகாண முதலமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார். அதுவரை பொறுத்திருக்கமுடியாது என்று குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், சுன்னாகம் பகுதிகளில் ஒயில் கலந்த தண்ணீரில் பாதிப்பு இல்லை என்றால் அதைப் பருகலாமா, இல்லையா? என்று எழுத்து மூலம் தமக்கு பதில் தரவேண்டும் என்றும் கோரினர்Read more...

Send us news ites that are relevant to this section